பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இங்கே பயிலும் பிள்ளைகளுள் பெரும்பாலோர் பெண் களே, காலையில் அனைத்து மாணவர்களும் (மூன்று பள்ளி களிலும் தனித்தனி.) ஒன்று கூடி வழிபாடு:ஆற்றுவது காண வேண்டிய ஒன்றாகும். பல பிள்ளைகள் உண்மையிலே கண்மூடி, கைகூப்பித் தம்மை மறந்து வாய்பாட, இறைவனைப் போற்றும் நிலை மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும். அவர்களுக்கிடையில் ஒரு சில பிள்ளைகள் விஷமங்கள் செய்வதும் அவர்கள் வழிபாட்டுக்கு இடையூறு செய்வதும் அவர்களைப் பக்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் அடக்குவதும் இல்லாமல் இல்லை. (ஒரு சில ஆசிரியர்கள் கூட அந்த முறையில் வழிபாட்டில் கருத்திருத்தாது, மாறுபட்ட பிள்ளைகளை அடக்காது இருப்பதும் உண்டு) இத்தகைய வழிபாட்டுக் கூடங்களுக்கு முறையாக வருவதும் முடிந்தபின் முறையாகச் செல்வதும் அவர்களை வளர்ந்த மாணவர்களே வழியிடை நின்று செல்ல ஆற்றுப்படுத்து வதும் அன்றாட ஒழுங்கு முறையில் உயர்ந்தனவாகும். வகுப்புகளிலும் பெரும்பாலும் பிள்ளைகள் அமைதியுடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்வதைச் சொல்லவும் வேண்டும். எங்கோ ஒருசில ஆசிரியர்களின் கட்டுபாடற்ற தன்மையால் ஒரிரு வகுப்புகளில் சற்றே ஒலி கிளம்புமாயினும் பொது வாகப் பாட நேரங்களில் முழு அமைதி நிலவும் வகையில் பிள்ளைகள் நடந்து கொள்வதை அனைவரும் பாராட்டுவர். வெளியேயிருந்து அடிக்கடி வரும் பெரியவர்கள் அமைதியைக் கண்டு பள்ளி விடுமுறையா' என்று கேட்பதும் உண்டு. இல்லை எனில் அவர்கள் வியப்படைவார்கள். பிள்ளைகள் பல வகைப்படுவர். பல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். செல்வர், வறியர், இடைநிலையார் எனும் மூவகையினத்தவர் பிள்ளைகளும் இங்கே பயில்கிறார்கள். பெரிய வீட்டுப் பிள்ளைகளும், உயர் அதிகாரிகள் அமைச்சர் கள் வீட்டுப் பிள்ளைகளும் நடுத்தர வாழ்வில் வாழ்வோர் பின்ளைகளும், நான்காம் வகை ஊழியர், பால்வியாபாரி, էէ வியாபாரி என வழங்கும் எளியநிலை வாழ்வில் உள்ளவர்