பக்கம்:திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 வீட்டுப்பிள்ளைகளும் இங்கே ஒன்ருகக் கலந்து ஒரு வேறுபாடு மின்றி உளத்தால் ஒன்றிப் பழகும் காட்சி, உண்மையிலேயே இவர்கள் வழியே வருங்காலப் பாரதத்தில்-சமுதாய வாழ்வில் இன்று உள்ள ஏற்றத்தாழ்வுகள் இல்லையாகும் என்ற எண்ணத்தை உண்டாக்காமல் போகாது. அப்படியே பல்வேறு மொழியினர், சமயத்தவர் வீட்டுப்பிள்ளைகளும் வேறுபாடற்று இங்கே பயின்று, விளையாடி, பண்பாடுற்று விளங்குவர். அதற்கேற்ற வகையிலே ஒரே வகையான உடையும் பிறவும் அவர்களை ஒன்றுசேர்க்க உதவுகின்றன. பிள்ளைகளிடம் உயர்வு தாழ்வு மனப்பான்மை காட்டக் கூடாத வகையில் பல விதிகள் அமைத்து, எழுத்தில் வடித்துத் தந்து செயல்படுத்தின போதிலும் சில செல்வர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காசும் பணமும் கொடுத்துக் கண்டதை வாங்க வழிகாட்டி விடுகிறார்கள். அப்படியே சிலர் நகை களைப் பூட்டிஅனுப்பி, பின்காணாவிட்டால் எங்களை வந்து தொல்லைப்படுத்துகிறார்கள். எனினும் பிஞ்சு உள்ளங் களைப் பெற்ற இந்த இளஞ்செல்வங்கள் அந்த வேறுபாடு களையெல்லாம் கடந்து சாதியால், சமயத்தால், பட்டத் தால், பதவியால், செல்வத்தால், பிறவற்றால் உண்டாகும் வேறுபாடுகளைக் கடந்து, ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள் போலப் பழகுவது எங்கள் மனத்துக்கு மகிழ்ச்சி அளிப் பதோடு, உண்மையிலேயே வருங்கால பாரதம் இவர்களால் வேறுபாடற்று ஒன்றிய உணர்வில் உயர்ச்சி பெறும் என்ற இன்பத்தையும் தருகிறது. - இளங்குழந்தைகளோடு குழந்தைகளுக்காக-குழந்தை களாகவே நாமும் மாறி வாழ்வில் பெறும் இன்பம் வேறு எந்த வகையிலும் பெற முடியாததாகும். இயேசு குழந்தை களை என்னிடம் வரவிடுங்கள், பரலோக ராஜ்யம் அவர் களுடையது' எனக் கூறியதும் இதுபற்றித்தானோ என எண்ண வேண்டியுள்ளது. சைவசமயத் தலைவராகிய ஞானசம்பந்தரும் சிவஞானபோதம் கண்ட மெய்கண்டாரும் குழந்தைகளாகவே குழந்தை உள்ளத்தோடே இறைவனைக் தி. தி.-7