பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ❖

திரும்பி வந்த மான் குட்டி



உயிர் தப்பினால் போதும் என்று அவள் நினைத் திருக்கிறாள். என்னை உயிரோடு காப்பாற்றத்தான் அவள் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறாள்!

“கலங்கிய கண்களுடன் அவள் இந்தக் காட்டுப் பக்கத்தைக் காட்டி, “ஒடு, ஒடு. உம். சீக்கிரம்” என்று கண் கலங்கக் கூறினாள். எனக்கு அந்த அன்பான உமாவைப் பிரிய மனம் இல்லை; உயிரைக் கொடுக்கவும் மனம் இல்லை. என்ன செய்வது? ஓடி வந்தேன். வரும்போதுதான் உன்னைப் பார்த்தேன்.”

முயல் கூறியதைக் கவனமாகக் கேட்ட குட்டி மான், “என்ன இது சிங்கம், புலிதான் நம்மை அடித்துத் தின்னும் என்று என் அம்மா சொல்லி யிருக்கிறாள். மனிதர்கள்கூடக் கொன்று தின்பார்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.

“பின்னே, நான் பொய்யா சொல்கிறேன்? நம்மைப் போன்ற, பிராணிகளை அவர்களிலே பலர் பிரியமாகவும் வளர்ப்பார்கள், மிகப் பிரியமாகவும் சாப்பிடுவார்கள்.”