பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 ❖

திரும்பி வந்த மான் குட்டி



துங்கி எழுந்தவுடனே சாப்பிடுவார்கள். இப்படியே காலங்கடத்தி வந்தார்கள். முன்கோபி ராஜா ஆள் அனுப்பிக் கேட்கிற போதெல்லாம், கலந்து பேசிச் சீக்கிரம் முடிவு செய்வதாகத் தகவல் அனுப்பினார்கள்

இப்படி ஒரு வாரம் ஓடிவிட்டது. ஒரு நாள் ராஜா அந்தப்புரத்திலே இருக்கிறபோது, அரண்மனைத் தலைமைச் சமையல்காரர் கையில் கரண்டியுடன் ஓடிவந்து,“மகாராஜா, மகாராஜா, அரிசி, பருப்பெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரு மாசத்துக்கு வாங்கி வச்சதை ஒரே வாரத்திலே அந்த அஞ்சு பேரும் தீர்த்துட்டாங்க மகாராஜா” என்று முறையிட்டார்.

உடனே ராஜாவுக்கு அபாரமான கோபம் வந்து விட்டது. அதைவிட அவருடைய பட்டத்து அரசிக்குக் கோபம் பீறிட்டது. “நாட்டிலேதான் பஞ்சம் என்றால், நம் அரண்மனையிலுமா பஞ்சம்?” என்று அலறினாள். . ராஜா, ராணியைச் சமாதானப் படுத்திவிட்டு நேராக அந்த ஐவரும் இருந்த மண்டபத்திற்கு வேக வேகமாகச் சென்றார். குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவர்களை மிகுந்த சிரமப்பட்டு எழுப்பி, “என்ன இது! இப்படி ஒரு வாரமாக வயிறு முட்டத் தின்றுவிட்டுத் தூங்குகிறீர்களே! என்ன முடிவு செய்தீர்கள்?” என்று ஆவேசமாகக் கேட்டார்.