பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழ. வள்ளியப்பா

❖ 35



என்று சொல்லி டாக்டர் ஊசி போட்டு, மருந்து கொடுத்தார். தலையைச் சுற்றி ஒரு கட்டும் போட்டு விட்டார்.

வீட்டிலே பொன்னனைக் கொண்டு வந்து சேர்த்ததும், அவன் அம்மாவும், அப்பாவும் அலறித் துடித்தார்கள். நடந்ததைக் கேட்டு, “நல்ல நாளிலே இப்படியா நடக்கணும்” என்று வேதனை அடைந்தார்கள்.

அன்று மாலை பொன்னனுடைய அப்பா அவன் அருகிலே வந்து அமர்ந்து கொண்டு, “பொன்னா, இப்ப வலி எப்படி இருக்குது” என்று கேட்டார்.

“வலி தெரியல்லே. நல்லவேளை நெத்தியிலே பட்டுது. தலையிலே பட்டிருந்தால்...?”

“ஆபத்துத்தான்... நல்ல காலம். ஆனாலும் பொன்னா, நீ சுதந்தரம்னா என்ன அர்த்தம்னு சரியாப் புரிஞ்சுக்கல்லே. சுதந்தரநாளிலே ஒவ்வொருத்தரும், தான் நினைக்கிறதைச் செய்தால் என்ன ஆகும்? நீ உன் இஷ்டம் போலே நாயைக் கல்லாலே அடிச்சாய். அதே மாதிரி இன்னொருத்தர் தடியை எடுத்துக்கிட்டு வந்து, தெருவிலே சும்மா போகிற உன்னை அடிக்கிறார்னு வச்சுக்கோ, அதுக்குப் பேர் சுதந்தரமா? கடைத் தெருவிலே நீ ஒரு காரை வேகமாகப் போக விடாமத் தடுத்தியே, அதனாலே