பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 ❖

திரும்பி வந்த மான் குட்டி



காக்கை, குருவி, மைனா, கிளி, கொக்கு இவைகளில் தினமும் இரண்டு மூன்று பறவைகளையாவது அடிக்காமல் அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், பறவைகளுக்கோ? திண்டாட்டம்!

இது எப்படியோ சோமுவின் அப்பாவுக்குத் தெரிந்து விட்டது. "சோமு, நீ நல்லாப் படிக்கிறாய். படிப்பு மட்டும் போதுமா? நல்ல குணமும் வேண்டாமா? அந்த வாசுவோ கெட்ட பையன். படிப்பிலே அக்கறையில்லாதவன். ஊர் சுற்றி. அவனோடே சேர்ந்து பறவைகளை அடிக்கலாமா? உனக்கு அந்தப் பறவைகள் ஒரு கெடுதலும் செய்யாத போது, அவைகளுக்குத் தொல்லை கொடுக்க லாமா? இனி, வாசுவோடு சேராதே. பறவைகளை அடிக்காதே" என்று அடிக்கடி புத்திமதி கூறுவார். அப்பா பேச்சைக் கேட்ட சோமு, அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வான்; அப்புறம்?

வாசுவின் பேச்சில் மயங்கி, அவனுடன் மாந்தோப்புக்கு உண்டிவில்லுடன் புறப்பட்டுவிடுவான்!

கோடை விடுமுறை வந்தது. சோமு அந்தக் கிராமத்திலே இருந்தால் கெட்டுப் போய்விடுவான் என்று அவன் அப்பா பயந்தார். ஆகையால், விடு