பக்கம்:திருவடி மாலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 திருவடி மாலை

மடன்மிசைத் தேன்பாய் மாலிருஞ் சோலை
        மலைமிசை மரகத மலையை
யுடன்மிசைச் சுழலும் புன்பிறப் பொழிவா
        னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம்பழி சூழ்கின்ற யானுன் பதுமபத
மல்லாற் றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம் வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார் பொல்லாரென் றிருகூறு செய்யு நவையு [முண்டே.

9. பிள்ளைப் பருவத் தொருகுழவி
        பெரியோர் கையாற் றொழத்தொழுது
பேணி யவர்தா முரைத்தமொழி
        பிதற்றி யிருக்கும் பெற்றியைப்போ
லுள்ளத் துருகு மன்பர்தொழி
        லுதனை நடிக்க வுவந்துனசீர்
உள்ள படியொன் றுணரும்வலி
        யொழிந்த விழிந்த நாயடியேன்
எள்ளத் தனையு மிளகாத
        விருப்பு மனத்தாற் பொய்ந்நாவா
லீயா திவறுங் கொடுங்கையா
        லெண்ணி யியம்பித் தொழலெல்லாங்
கொள்ளத் தினையுந் திருவுளத்துக்
         குறித்த லுளதோ கோகனகக்
கோயில் வளர்ந்த கொடிபடர்ந்த
         கொடைக்கற் பகமே குணக்கடலே.

10. வெருவித் துயர்படு கடலைப் பொருபிற
        வியினிற் சுழல்வரும் வினைதீர
மருவித் தொழுமன மதனைத் தருவதுன்
        மகிமைத் திருவரு ணெறியாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/10&oldid=1318982" இலிருந்து மீள்விக்கப்பட்டது