பக்கம்:திருவடி மாலை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

9

குருவிற் பொலிகுல முழுதுக் கொருபதி
       குருகைப் பதிவளர் தமிழ்மாறர்
பெருவிற் பனமறை யமிழ்தைப் பருகிய
       பெருமைப் புயலெனு நெடுமாலே.

11.கத்து கடல்சூழ் புவியின்வசைக்
        கண்டா கருணன் முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்
        திறத்துக் குகந்தே யவற்குமவன்
சித்த முவத்தல் காரணமாத்
        தீய தம்பி தனக்குமுயர்
முத்தி கொடுத்த திருவருளே
        மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்தகண் டாகனன்
        பாழி வெள்ளிப் பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
        முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
         புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப்பெறு மாயமென்
         நான்மு கப்பிர மற்கொரு தந்தையே.

13.கூவத்தே வீழ்ந்தசிறு குழவியை நற்
         றாயெடுக்கக் குதித்தாற் போலப்
பாவத்தே மனக்கலம்போய்ப் பவக்கடல்வாய்ப்
         பட்டாரைப் பரமன் றானே
யாவத்தே யில்லாத பெருவீட்டை
         யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத் தோன்றுவனிம்
         மெய்யுணர்ந்தோர் வினைதீர்ந் தோரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/11&oldid=1319018" இலிருந்து மீள்விக்கப்பட்டது