பக்கம்:திருவடி மாலை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 திருவடி மாலை

14.காயா மலருங் கருவிளையுங்
        காருங் கடலுங் கமழுமெழின்
மாயா மதுசூ தனமுகுந்த
        வரமா தவவா மனவெனவா
யோயா தலற்றி யகங்கரைய
        யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்
பாயா வழிந்து வினைக்கோடை
        பாற்று நாளு முளதேயோ.

15.மனை விட்டிலன் மகவிட்டிலன்
        வலிவிட்டிலன் மாலே
தனைவிட்டில னிலம்விட்டிலன்
        றனம்விட்டில னாசை
தினைவிட்டிலன் வினைவிட்டிலன்
        றிருவற்றவ னேனும்
உனைவிட்டில னெனின் மற்றவ
        னொளிபெற்றவ னாமே.

16.நின்ன தாகுமால் விண்ணு மண்ணொடும்
       நிலைய தாகிய வீடு மேயெனின்
என்ன தாகயா துள்ள தோதெரி
       கிற்கிலே னுடற் செனன மோடுயிர்
உன்ன தாகலா னிற்கு நல்குதற்
        கொன்று மில்லையா னேழை யேனுமென்
தன்ன தாகவென் கையி லுள்ளதஞ்
        சலிநி னாதுகை தனிலி லாததே.

17.நெய்யிற் றனியே யெரியாத
        நெருப்புத் திரியின் மிசையதையே
பெய்யிற் சுடர்விட் டொளிகிளரும்
       பெற்றி யேய்ப்ப மலவுயிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/12&oldid=1319019" இலிருந்து மீள்விக்கப்பட்டது