பக்கம்:திருவடி மாலை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

11



மெய்யிற் புகுவித் திரண்டனையு
        மேவிப்பொலியும் விழுச்சுடர் நீ
கையிற் கனிபோற் காட்டினல்லாற்
        காணா தெவர்க்கு மகக்கண்ணே.

18.காமாந்த காரமடுக் காரிகையார் வேட்கைக்
        கராவாயிற் கண்ணிழந்து கன் மனவெங் களிறொன்
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா
        தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப் புக்குப்
       போற்றுகரி காத்ததினு மேற்றமிதற் குண்டால்
தீமாந்து மெழுகுபொரத் தினமுருகு மன் பர்
        சிந்தைகுடி கொண்டிருலகு முந்தைமுழு முதலே.

19.பாபத்தாற் காழ்த்தறிவு
        பாழ்த்ததனான் வெளிறியடுங் கோபத்ததாற் சிவப்புற்றுக்
        கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப்பெய்தி
        யழுக்காற்றாற் றடிக்குமனம்
சாபத்தேற் குயிர்ப்பிணியாய்த்
        தழைப்பதுகாண் டனிமுதலே.

20.பழுவிருக்கத் தோல்வேய்ந்த பாவை நெஞ்சப்
        பாம்பிருக்கும் பாழ்ங்குடங்கர் பற்பல் கோடிப்
புழுவிருக்கப் போர்த்தமலப் பொதியே யைந்து
        புலப்பேய்கள் குடியிருக்கும் புக்கில் புண்ணாய்
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய் யென்று
        குறித்திருக்கப் பெற்றபெருங்
குணத்தோர்க் கல்லா
லெழுவிருக்க மொருகணையா னெய்து பத்த
        ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/13&oldid=1319020" இலிருந்து மீள்விக்கப்பட்டது