பக்கம்:திருவடி மாலை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 திருவடி மாலை


21.பணவாசைப் பேய்கண் டுயிலவிடா
        தெனைப் பாவையராம்
பிணவாசைப் பூதங் கனவும்
        புகுந்து பிடித்துடற்று
முணவாசைக் கூளியெஞ் ஞான்றுந்
        தெறுமிவைக் கோய்வுமுண்டோ குணவாசைப் பாநுவைப் போன்றுள
        னோங்கென் குலதெய்வமே.

22.பொன்னினைக்கும் புகழ்நினைக்கும்
        பூமியெலா நினைக்கும்
பூணினைக்கு மூணினைக்கும்
        பூவைமொழி யாரை
மன்னினைக்குந் தன்னினைக்கும்
        மற்றையர் க்குத் தீது
வரநினைக்கும் பழி மறைக்கும்
        வழிநினைக்குந் தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
        மிருள்புகுத்த வல்ல
தெதுநினைக்க வென்றாலு
        மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
        நீநினைத்தல் வேண்டு
நீடொளிய சேடகிரி
        நின்றபெரு மாளே.

23.மாட்டாலு மயக்காலு மகிழாலும்
        புகழாலும் வாட்கண் மாதர்
கூட்டாலு முணவாலுங் குடியாக்கொண்
        மடியாலுங் கோபத் தாலும்
பீட்டாலு மழுக்காற்றுப் பேயாலு
        நாயேன்செய் பிழைக ளெல்லாம்
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்
        பாவமெனப் பகர்வ ரெந்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/14&oldid=1319021" இலிருந்து மீள்விக்கப்பட்டது