பக்கம்:திருவடி மாலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 திருவடி மாலை



தினைபடைக்க மாட்டாது தீநரகு
     படைப்பார்தாஞ் செய்த முன்னை
வினைபடைத்த தல்லாது வேறுண்டோ
     மெய்யுணர்ந்து விள்ளுங் காலே.

28.குழலோம்பு மினியவிசைக் குயிலோம்பு
        குரன்மடவார் கொடிய காமத் தழலோம்பி யேயபணி தலையோம்பிப்
        பெற்றவற்ப சார மென்னும்
விழலோம்பி யதனானோய் மிகவோம்பி
        மெலிவெல்லாம் வீடாண் மாயன்
கழலோம்பு மாறறியாக் கசடோம்பி
        நின்றவெய்ய காட்சி யாமே.

29.பாடுபட்டுத் தேறிநிதிப் பரப்பு நாளும்
        பகைவிளைக்கு நிலனும்பெண் பாலார் கொங்கைக்
கோடுபட்டுச் சிதைந்த புலவுடம்பும் வாழ்நாள்
        குறைபட்டுப் போம்வழிக்குத் துணையோ சொல்லாய்
காடுபட்டுப் போகாமே காக்குங் கார்போற்
        கருணைமழை பொழிகின்ற கமலக் கண்ணற்
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
        திரும்பிறவிக் கடற்பட்ட வேழை நெஞ்சே.

30.எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
        திருநுதலா ரிரண்டு கொங்கைக் கல்லணைத்துக் கண்டசுகங் கனவணைத்த
        கனிசுவைத்த காட்சித் தென்று வில்லணைத்து நீலமுகின் மிளிர்பச்சைப்
        பாயன்மிசை மேயி னாற்போற் புல்லணைக்கட் சாய்ந்தவன்பேர் புகன் றிருப்பார்
        பேர்புகன்று புகுவர் வீடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/16&oldid=1319024" இலிருந்து மீள்விக்கப்பட்டது