பக்கம்:திருவடி மாலை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 திருவடி மாலை

35. செகத்துக்க ணவதரிக்குந் தெய்வதச்சீர்
        கேட்டுரையாச் செவிட்டு மூங்கை
முகத்துக்கண் விழித்திருக்க வகத்துக்கண்
        குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக்கண் வாழ்வனைத்து மிருங்கான
        னீரனைத்தென் றெண்ணா தேபெண்
அகத்துக்கண் வந்துழல வாழ்நரக
        மமிழப்போ மாதன் யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம்வேட்ட
        மயலானே வையத் தென்றுங்
கருவேட்ட விடர்க்கடலிற் கரைவேட்ட
        வுடை கலம்போற் கவிழ்கின் றேற்குச்
செருவேட்ட, தென்னிலங்கை தீவேட்டஞ்
        செயம்பொருத செல்வன் கஞ்சத்
திருவேட்ட முழுமுதல்வன் சீர்வேட்ட
        சேவடியே சேம மாமே.

37.ஆற்றைக் கடவா திருஞ்சுழிவா
        வாழ்த்த லிரையு மிடுமரம்போன்
றவரைத்திரு வா திருவையூரின்
        மாட்ட விரையு மாமவூடற்
றூற்றைக் களைந்து வேர றுக்கத்
        துகடீ ரருள்வா டருவைகொலோ சேற்றைக் கழுவ முடையளறு
        திளைப்பேற் கொருநாட் டிருமாலே.

38. தெருளாசைப் பட்டறிந்து செங்கண்மால்
        சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா லருளாசைப் பட்டிருக்கு மடியார்முன்
        செடிநாயே னவனி மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/18&oldid=1319145" இலிருந்து மீள்விக்கப்பட்டது