பக்கம்:திருவடி மாலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

17


பொருளாசைப் பட்டிவறிப் புன்பழியே
     நனியீட்டிப் பொருகண் மானார்
மருளாசைப் பட்டதனா னிருளாசைப்
     பட்டெய்த வதிகின் றேனே.

39.கறையடிக்குள் வெதுப்பொழியக் கலுழன் மிசைக்
        கார் மழைபோற் கடிது போந்த விறையடிக்குத் தினையுருகா விரும்புமன
        மெமனெனும்பேர் யார் சொற் றாலும் மறைபடிக்கும் பதைபதைக்கும் பல்கோடி
        நினைநினைந்து பரிவு கூரு மறையடிக்கு முடிக்குமிக வழுத்துமரி
        யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40.தேகநிலை யாதநிலை செத்தபின மோதுஞ்
        செல்வநிலை யாதபடி சொல்வரிர வாளர்
போகநிலை யாமைவலி போமுதுமை கூறும்
        புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்
மோகநிலை யாமைசொல மூடமன முண்டு
        முற்றுநிலை யாமைமறை கற்றவர்கள் சொல்வார்
சோகநிலை யாதநிலை சொல்லியருள் வாரார்
        சோலைமலை மேவிவளர் நீலநெடு மாலே.

41.முடியிருக்கு நெடுமாலுக் கடிமைசெய
        முயலாத மூட மூர்க்கச்
செடியிருக்கு மனக்குரங்கு குடியிருக்கு
        முடையாக்கை சிதையா தேயிப் படியிருக்கு மெனநினைக்கும் பாமரர்க்குச்
        செத்தபிணம் பறையாற் சாற்றி நொடியிருக்கு மெனக்கருதீர் நுமக்குமிது
        வழியென்று நுவலு மாலோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/19&oldid=1317434" இலிருந்து மீள்விக்கப்பட்டது