பக்கம்:திருவடி மாலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருவடி மாலை





42. குகைகண்டு தனியிருந்து குல தெய்வம்
     வரானாக்காக் குருட்டு நெஞ்சாற்
பகை கண்டு சினந்துமுறு பணங்கண்டு
     விழைந்தும்விழிப் பான லார் புன்
னகை கண்டு மருண்டுமவர் நடங்கண்டு
     வியந்துமொழி நாள்க ளெல்லாந்
தொகைகண்டு துறவார்க்குச் சுடுகாட்டிற்
     புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறிகேட்டு வாங்கியதை மலைக்கடவுட் கென்று
     வதைத்திட்டுக் கொலைபடைத்து வருள்படைத்த வேலன்
குறிகேட்டுக் களியாட்டுக் குணக்கூத்து மாடிக்
     கும்பிட்டுப் பெற்றபயன் றுன்பத்தின் வேறோ
செறிகேட்டுப் பவக்கடலிற் றிரையிடர்க்கு நொந்து
     தீவினைக் கராவாயிற் சிக்குவது தீர்ந்து
நெறிகேட்டுப் பெருவீட்டி னிலைத்தினிது வாழ
     நீர்நினை தி ராயினரி பேர் நினைதிர் மாதோ.

44.தீவினைப் பெருக்காற் பொருடனைப் பெருக்கிச்
     சிறுபுகழ்க் கொருசில விடுவீர்
கோவினைத் தொலைத்துச் செருப்பினைக் கொடுக்குங்
     கொள்கை நுங் கொள்கையே யம்மா
காவினைச் சயித்த கொடையினா லடியர்
     கருதிய தன்னையு மளிக்குந்
தேவினைப் பழிச்சி யாவையுங் கழித்துச்
     சிறப்பினை யுறப்பெறா தீரே.

45. மாகனக மேருவென நிதியி ருந்தென்
     மகிழ்பெண்டிர் மக்களொடு வாழ்விருந்தென்
றேகநக மெனவிருந்தென் றெளிந்த தாலென்
     செகமுழுது மடிமைபுகுஞ் செயத்தி னாலென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/20&oldid=1317414" இலிருந்து மீள்விக்கப்பட்டது