பக்கம்:திருவடி மாலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 திருவடி மாலை

49. ஓலை கட்டித் தூதேகிப் பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த
மாலைகட்டிக் கருள்புரிந்தான்
               மண்ணினுற்றார்
புண்ணியத்தின் வாழச் சேது
வேலைகட்டி வைத்தபிரா னருட்கடலிற்
குளித்தற்கு விரகி லாமே
சேலைகட்டி விழிவலைக்கொள் தெரிவையர்கா
தலின்மூழ்குஞ் சிதடன் யானே.

50.பிரமனைமுன் படைத்தவற்குப்
 பெருமறையைப்
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனைமுன் றுதிக்கறியாப் பாழ்ம்பிறப்பு
மானிடமாய்ப் பார்க்கப் பட்ட
கரமனைத்துக் கழுகனைத்துக் கழுதனைத்துக்
கல்லனைத்துக் கனியு நஞ்சா
மரமனைத்தென் றெண்ணிவிடா மதியுடையேற்
குவமையிந்த வையத் துண்டே.

51. தனக்குமே லொருவருள ரென வெறுக்குஞ்
சழக்குயிரின் மமதையினைச் சாற்றி னுற்றா
ருனக்குமேற் கடவளுள னென்ற போதும்
உருத்தவரைக் கொலைசூழு முதற்குச் சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்
தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லையென வகங்கரிப்பி
னெல்லையினின் றேற்கிறைவ வென்செய் வாயே.

52. முற்றத் துறந்த முனிவரரு
முதல்வா நின்பான் முறையிட்டுச்
செற்றக் காம மயக்கமெலாந்
தீரு மாறு வரங்கிடப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/22&oldid=1319221" இலிருந்து மீள்விக்கப்பட்டது