பக்கம்:திருவடி மாலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 திருவடி மாலை

56. மறப்பினுக்கோ ரறையாகு மையிருட்டுச்
சிறையாகு மயற்கூ டாகும்
இறப்பினுக்கும் பிறப்பினுக்கும் படியாகும்
நரகினுக்கோ ரேணி யாகுந்
துறப்பினுக்குப் பகையாகுந் துர்க்குணத்துக்
குறவாகுந் துகடீ ரெந்தாய்
சிறப்பினுக்குச் செல்லாது செய்சுவராந்
தீமனமென் செயத்தந் தாயே.

57. ஒழுக்கினா னீத்த வுயர்முனி வரரு
முள்ளழுக் கறவுனை யுள்வா
ரிழுக்கினா னளறே யெனுங்குடும் பத்தோ
டிரண்டறப் பொருந்தழுக் கிருநீர்
முழுக்கினாற் போமோ வுன்றிரு வருளின்
மூழ்கினா னல்லது வினையைப்
புழுக்கினான் முளைக்கா வித்தெனப் புரிந்து
போற்றினார்க் காற்றுமா தவனே.

58. உடலிந்தே யிடரினுக்கொன் றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக் கஞ்சல் போலாங்
குடலிருந்த தொடக்கறுத்துக் கோத்த சுற்றக்
கொடும்பாசப் பிண்ணிப்பவிழ்த்துக் கொண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி [பெண்ட
யகப்பற்றும் புறப்பற்று மனைத்தும் வீட்டி
மடலிருந்த துளவலங்கன் மாயன் றூய
மலரடிக்கீழ்ப் புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59. சரிந்தகுழ றாங்கியதண் கரமும் பற்றத்
தளர்ந்தவுடை பிடித்தமலர்க் கரமும் விட்டுத் தெரிந்தவுளத் தொளிர்கின்ற தேவே யுன்னைத்
தேர்ந்தொருகாற் கூப்புதலைச் செய்யும் போழ்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/24&oldid=1318218" இலிருந்து மீள்விக்கப்பட்டது