பக்கம்:திருவடி மாலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார் 23

விரிந்தகுணப் பாண்டவர்தம் வென்றி போல
விளங்குதவக் கொடிமான மெய்யே காத்துப்
புரிந்தபெரும் பாரதமும் போதா தென்று
புலம்பியதுன் றிருவருளின் பொலிவே யம்மா.

60. துட்டவிரா வணனாவாற் சுடுகென் றோதத்
துனைந்தெழுந்து புகுந்துன்பாற் றொழுது தீயர்
கிட்டவிரா முழுமுதலே சரண மென்று
கிளந்திரங்கும் வீடணனைத் தீய னென்னப்
பட்டவிராக் கதன்றம்பி நம்பாற் கொள்ளப்
படாதென்ற கவிவேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி னிராவ ணற்கு
முற்றபய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்.

61. பிரமாண்ட கோடியெலாம் பெற்றுக் காக்கும்
பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியனைத்து முவரிக் கூலத்
துறுகணுனக் கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக் கவிந்து கொண்டு
கடிமதில்போ னின்றிளைப்பாற் கண்க டுஞ்சச்
சரமாண்ட வில்லினொடுந் தம்பி யோடுந்
தாண்டியவை காத்தவரு டமியேன் றஞ்சம்.

62. திசைக்கும் வெப்ப வினைத்து ரைத்தெறு
திடத்த வச்ச வரிப்பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித்துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த முடைச்சவத்
தசைக்கு மற்பி னுருக்கொ ளுளத்தருள்
தழைத்த பத்த ருடற்புள கத்தொடு
தழற்க ணுற்ற வரக்கை நிகர்த்துளன்
தனித்து ருக்க முறத்தமி ழிற்பொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/25&oldid=1318303" இலிருந்து மீள்விக்கப்பட்டது