பக்கம்:திருவடி மாலை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 திருவடி மாலை

யிசைக்கும் வெற்றி யுருக்கு மிணிக்குயி
லெழிற்கை பற்றி யதற்கு வெறுத்தர
வெனக்கொ தித்த செருக்க னிடைக்குலத்
திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்
மனத்தை வைக்க நினைப்பகொல் கற்றவர்
மயக்க மிக்க பவக்கடல் வற்றவே.

63. விதுவைத்த தலைச்சிவ னுக்குமலர்
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்றமு துக்குறைவி
புனைபுத்தமிழ் தத்தமி ழிற்குமுடி
மதுவைத்த விதழ்த்தொடை யற்குமகிழ்
மனம்வைத்து மணத்தைய ளித்தபுயல்
பொதுவைத்த நிதிக்கு நிகர்த்தவருள்
பொழியத் தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சிவனயனே யெனலான
தெய்வதங்கள் திகழ்மந் தாரக்
காப்படைத்த விந்திரனே தலையாய
தேவர்நரர் கனக மேரு
தேப்படைத்த பலகோடி யண்டமுதற்
பூதமெலாந் திருமால் நாபிப்
பூப்படைத்த தென்றவன்பேர் நாப்படைத்த
பயன்கொள்ளப் புகல்வர் மேலோர்.

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலேதொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/26&oldid=1318306" இலிருந்து மீள்விக்கப்பட்டது