பக்கம்:திருவடி மாலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

திருவடி மாலை

69. மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்றுமயல் மனைகளில்
வயிறு பட்டபசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலிகொண்
டுறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கெனமுன் னாளினி
லுடைமை பட்டுமண முடிய லுற்றதனை
யுணர்வின் வைத்துநிறை தன் மனம்
வேறு பட்டிலளு மாகி மற்றெதையும்
விழைத லற்றவளு மாயினால்
மெலியு மத்தெரிவை குணனை மெச்சிவரன்
மேவு காலமுள தாகுமால்
துாறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர்வி விட்டுமுனை யல்லது
தொழநி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்டமுடி மாயனே.

70. தாயிருந்தும் முலையினிற்பால் தழைத்திருந்துந்
தரைக்கிடக்குந் தருணந் தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின்முலை மடுக்குந் தாய்போல்
நீயிருந்து நின்கணருள் நிறைந்திருந்தும்
யானருந்தா நிலைகண் டென்கண்
மேயிருந்து நீயூட்டா வெனின்மெலிவேன்
வசையுநினை மேவு மெந்தாய்.

71. அனும னுக்கு நளிர்க வெனச்சொலி
யழலின் வெப்ப மகற்றி யளித்தவள்
அடல ரக்கர் சிறையை யறுப்பதற்
கனுமு யற்சியு முற்றில ளற்றென
முனும யற்கு முதுமறை சொற்றவன்
முழுது யிர்க்கு முலகு படைத்தவன்
முதிரி ருட்கொர் பரிதி யளித்தவன்
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/28&oldid=1317931" இலிருந்து மீள்விக்கப்பட்டது