பக்கம்:திருவடி மாலை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

27

தனுவெ வைக்கும் நிறுவி வளர்ப்பவன்
தனய ருக்குண் முலையை யமைப்பவன்
தழை பயிர்க்கு மழையை விடுப்பவன்
தரணி துக்க மொழிய வுதிப்பவன்
இனும னுக்கு கொடிய பவக்கடல்
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்
எழின்மி குத்த வருளின் முறைப்படி
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப் புறங்கழுவிப்
பொழுதே புசித்துப் புனையரவப்
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்
புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன் பரமா வுனைத்துதியேன்
இற்றை நாளுன் னடியெண்ணி
யிருப்பேற் கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந் திருவீ டணனுமடற்
காகா சுரனுந் துருபதையும்
பரியு மிடரா னுளநடுங்கிப்
பகவ னுனையே பற்றியபோ
துரிய துய்மை முறை புரிய
வுணர்ந்து மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன் தனக்கு முளதாமே.

74.பாந்தண் மணிவாய் விட மருத்திடப்
படரு மழலி னிடைவீழ்த்திப்
   படையி னறுத்து மலையுருட்டிப்
பதைக்க வதைக்கும் படிபுரிந்துந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/29&oldid=1318809" இலிருந்து மீள்விக்கப்பட்டது