பக்கம்:திருவடி மாலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருவடி மாலை

தேந்தண் டுளவத் தொடைகமழுஞ்
செழுந்தாண் மலரி னழுந்துமனந்
திறம்பாச் சிறுவன் மொழிகாக்கத்
திருத்தூ ணுதித்துத் தனைக்குவிக்குங்
காந்தண் மெலியும் விரற்கரத்தான்
கருத்தோன் றிடங்காண் டலைவேட்டுக்
கனக னுரங்கீண் டுடற்றொடக்காற்
கரிய குடரு மெடுத்தணிந்து
பூந்தண் மாரி சுரருவந்து
பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ் சிங்கப்பிரான்
புகழே நினைவேற் கிகழ்வுளதோ,

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்
கினிய வுடலா யிருக்குமுடல்
பொல்லா தொருநோயு றினதனைப்
போக்க முயற லுயிர்க்கன்றித்
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள் கழற்கே யறத்தீர்ந்த
நல்லார் தமக்குத் தாமுயலார்
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான் காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார் தம்மு
ளெம்பிரான் றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ் சிரமேற் றாங்கு
மருமையினாற் பெருமைமிகப் படைத்தா
வெம்பிரா மனம்பழுத்த விழுத்த பத்தி [ளன்னாள்
வினையேற்குத் தினையேனு மேவு மேயோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/30&oldid=1317859" இலிருந்து மீள்விக்கப்பட்டது