பக்கம்:திருவடி மாலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

31

83. நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர் .
நிறைகு ழைத்தரு வடிய டுத்தவர்
நெடுவெ யிற்றுயர் தீர்பபோற்.
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்
கேடில் கொம்பிடை யேந்தினார்
வீழ லென்றும் விழாமை யென்றுமிம்
மேதி னிக்கண் மிடைந்ததீ
வினைத ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்
தாழ லொன்றுமி லாது போயவர்
தாள டைந்தவர் யாவருஞ்
சார்கொ டும்பவ நோயொ ழிந்துயர்
தணவி லிடன்படை வாரரோ.

84. திலத்தளவும் பிறர்க்குதவாத் தீயமன னாலே
சிதலை தின்ற மதலையெனத் தினமெலிந்து சாய்வேன்
சலத்தையடை தொறும்வேதத் தனிக்கடவு ளுன்னைத்
தயாவிலியென் பேனென்றன் சழக்குவினை யென்னேன்
நலத்தநெறி நடக்கறியா தடியிழுக்கி வீழ்ந்து
நனிதுயரான் முனிவெய்தி நடுங்குகர மோச்சித்
தலத்தையறை குற்ற தளர் நடைப்பருவக் குழவி
தன்மதியென் றுன்மதியிற் சாலவழ கிற்றே.

85. தேனும் பாலுங் கன்னலும்போற்
றெவிட்டாச் சுவைய தீந்தமிழின்
 யானும் பாட வல்லனென
ஞாலம் புகழ்த னனிவிருப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/33&oldid=1317369" இலிருந்து மீள்விக்கப்பட்டது