பக்கம்:திருவடி மாலை.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

திருவடி மாலை

வானும் பாரு மளந்தசெந்தா
மரைத்தாள் விருப்போ நீயறிவை
மீனும் பாழி யாமையுமாம்
விமலா நின்சீர் விளம்புதற்கே.

86.

தழலை நிகர்த்த துயர்ப்பிறவி
தழைக்கு நிலனா யயன்றிருத்து
மழலை மொழிப்பெண் மயிலனையார்
மயற்பேய் பிடித்த மனக்குரங்குன்
கழலை வழுத்தி யமுதுசுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலைவளர்க்கு மாத ரைப்போன்
மெலிதல் விதியோ விழுப்பொருளே.

87.

விள்ளற் கரிய தொருவீடும்
வேண்டா விறலின் விழுப்பெரியார்
கொள்ளக் குறையாப் பெருங்கருணைக்
குவாலை முகந்து கொளவளிக்கும்
வள்ள கடவு டிருவடிப்பூ
மணக்கயப் பனுவன் மாலையெலாம்
தள்ளப் படுமா லீமமிசைத்
தயங்கு மாலை தனைநிகர்த்தே.

88.- - -

- - -
பவத்தைப் புகுவேன் பரமாயான்
பாவிற் குழல்போ லுழல்வேனோ
தவத்தைப் புகுவார்க் குளதாமுன்
றயைதான் றமியேற் கிலதாமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/34&oldid=1319780" இலிருந்து மீள்விக்கப்பட்டது