பக்கம்:திருவடி மாலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராகவையங்கார்

33

89. நீயிருக்குங் கோயிலென நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்
பேயிருக்கும் பாழ்மனையிற் பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக் கச்ச
மாயிருக்குந் தீயவினைத் தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்
தாயிருக்கு மாறிருக்குந் தடங்கருணைப்
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்
முலைக்கண் மோத முரணழிந்து
நித்த மிரங்கும் வகையுடைந்த
நெஞ்சப் புணையே துணையாய்ப்போய்
நத்த மிரங்கும் பவக்கடலி
னனிமூழ் குவதொன் றல்லாதுன்
சித்த மிரங்கும் படிவேறென்
செயவ லேன்யான் தெய்வதமே.

91. தேறா வொருவன் றெங்கிளநீர்
செவ்வே நிறைந்த தீங்காயைச்
செங்கை வருந்த வசைத்த சைத்துச்
சிறிதுந் தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது
வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்
பேறா யருளுக் குருவான
பெருந்தே வூனப் பேய்விழிக்குப்
பிறங்கா வியல்பா னிலையென்று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/35&oldid=1318797" இலிருந்து மீள்விக்கப்பட்டது