பக்கம்:திருவடி மாலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 திருவடி மாலை

நீறாய் நிலத்து விளிவேனை
நெடுமாற் கேநீ யடிமையென
நினைவித் தெடுத்தாண் டதுஞான
நிதிபோன் மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல் கொண்டிடர்
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்
விதந்த துந்தவ றாகுமே
கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய னிந்திரர்
காசி லாதப ராச ராதியர்
காண வாசைகொள் சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்
மாசு ளேற்கென வேறு பாதம்
வகுத்தி லாதென் மாயனே.

93. முழுதுந் தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன் றிருந்த சுனையிற்
பழுதின் றிருந்த புனலின்கண் வந்து
படர்திங்க ணீழல் படல்போற்
றொழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/36&oldid=1317327" இலிருந்து மீள்விக்கப்பட்டது