பக்கம்:திருவடி மாலை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவையங்கார் 35

94. வெருடருங் கூற்ற மேற்றவெந் நரகின்
விழுமமே கெழுமியும் பல்கா
லுருடரும் பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப் பொல்லா
இருடரு ஞாலத் திடாெலா முழந்து
மிம்மியுங் கழிந்திலா தந்தோ
தெருடருந் தேவுன் னருளையு மறிக்குந்
திறத்ததென் தீவினைத் திரளே.

95. வான்மறந்த காலத்தும் வழங்குபுனற்
பேராறு மான நின்னின்
றூன்மறந்த யோகியர்த முளமறந்து
பருகவரு ளொழுகா நிற்ப
நான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய் பிள்ளை
தான்மறந்துந் தான்மறவா ளெனல்பொய்யோ
தரைகடந்த சரணத் தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற் றிளைக்கும் போதா
வொருதுளியிற் றுளியெடுத்திங் குரைக்கப் புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர் பயன்கருதி யில்லை கண்டாய்
தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்
றன்னுடலம் வளர்ப்பதெனச் சற்றுப் பிள்ளை
மனக்கணினைப் பில்லாத வாறு போல்வேன்
வரத்தவத்த ரமுதமென மடுக்குந் தேவே.

97. மத்தேறு முதலாகப் படாதனபட்
டுயிர்க்கருள வருமாத் தெய்வம்
பித்தேறு மகவுக்கும் பெரிதிடருற்
றுணவருத்தும் பெற்றாண் மான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/37&oldid=1317394" இலிருந்து மீள்விக்கப்பட்டது