பக்கம்:திருவடி மாலை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 திருவடி மாலை

வித்திச் சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்திச் சுவைநல் கருட்கடவுண்
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப் புரிந்த பெருந்தமிழிற்
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப் புரிந்த தெருட்பெரியார்
நயந்த கடவுட் பத்திமைதான்
கேட்டைப் புரிந்தேற் கணுவேனுங்
கிடையா திலைகொண் டுளதெனின்யான்
பாட்டைப் புரிந்து படிறியற்றிப்
பாரை மயக்கும் பாதகனே.

105. செகத்தைப் புரக்கக் கவித்தமுடி
திருந்த வெழுதித் தேசெழுதேன்
செந்தா மரைக்க ணெழுதியருட்
டேனார் வெள்ளந் தெரித்தெழுதேன்
முகத்தைப் புதுக்கி யெழுதிமணி
முறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்
மொய்யா ரகல மெழுதிமலர்
முதல்வி கோயின் முடித்தெழுதேன்.

106. அகட்டைப் புனைய வெழுதியுல
கனைத்து மடங்கு மாறெழுதேன்
அணியார் நாபி யெழுதிமறை
யவனார் வரவை யமைத்தெழுதேன்
இகத்தைப் பரத்தை யளிககுமடி
யெழுதி யெமைக்காப் பதையெழுதேன்
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந் திருந்தேனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/40&oldid=1317410" இலிருந்து மீள்விக்கப்பட்டது