பக்கம்:திருவடி மாலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவையங்கர் 39

107.தன்னையே தந்தையெனச் சார்ந்தார்க்கோர் தந்தையையும்
பின்னையே நல்காப் பெருங்கடவுள்-முன்னையே
தன்னையே தந்தையெனச் சாரார்க் கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108. கொலைக்களிற்றிற் கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக் கொடுத்த விதமே-நிலைத்ததமிழ்ப்
பாவைப் பிறர்க்குப் பகர்ந்த பிழைதீர
நாவைக் கழுவினே னான்.

109. கற்ற நயித்துருவ காகிபனி ராகவன்யான்.
சொற்ற தமிழ்க்குச் *சுவைதேறார்-உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவு ளல்லாற்பிற்.


  • "கேள்வியாற் செவிகண்முற்றுந் தோட்டவருணர் வினுண்ணு மமுதத்தின் சுவையாய் நின்றான்" என்பது கம்பநாடர் திருவாக்கு.(இராமாவதாரம். ஆரணிய.சவரிபிறப். 7)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/41&oldid=1319776" இலிருந்து மீள்விக்கப்பட்டது