பக்கம்:திருவடி மாலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீராமநாமப் பாட்டு

1. மதியிருக்குஞ் சடைச்சிவனார் மனைவியினுக்
குபதேசம் வகுத்துக் கங்கை
நதியிருக்குந் தண்காசி நகர்மரிக்கு
முயிர்க்கெல்லா நல்கக் கஞ்சப்
பொதியிருக்கு மறைமுதல்வன் பொறியழித்து
வீடளிக்கும் பொற்பிற் றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்
ராமவென விளம்பு வாயே.

2. தாதையார் நாரதற்குத் தந்த நாமம்
தவமுனிவன் வான்மீகி சாற்று நாமம்
மேதையார் ஞானியார்தாம் விள்ளு நாமம்
விபீடணற்குப் பேறருள மிக்க நாமம்
தீதையா ருற்றாலுந் தீர்க்கு நாமம்
தேவரெலாஞ் செபிக்கின்ற தெய்வ நாமம்
சீதையா ருயிர்தளிர்க்கச் செய்த நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/42&oldid=1317941" இலிருந்து மீள்விக்கப்பட்டது