பக்கம்:திருவடி மாலை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.இராவகையங்கர் 41

3. குருவடிவ வசிட்டன் மகிழ் கூர்ந்த நாமம்
கோசிகனார் வழிபட்டுக் கொண்ட நாமம்
கருவடியிற் புகாநெறியே காட்டு நாமம்
கவந்தனொடு விராதனுயிர் களிக்கு நாமம்
மருவடிய ரெல்லாரும் வாழ்த்து நாமம்
மந்திரங்கட் கரசெனவே வகுத்த நாமம்
திருவடிக்கின் னமுதாத்தித் திக்கு நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

4. இகத்துக்கும் பரத்துக்கு மேற்ற நாமம்
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்
மகத்துக்குப் புகல்கின்ற மகிமை நாமம்
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்
முகத்துக்கின் சுவைத்தாக முளைத்த நாமம்
முன்னொருபுள் சிறைமுளைக்க மொழிந்த நாமம்
செகத்துக்குந் திவியினுக்குஞ் சிறந்த நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

5.‡ உலகினிலெட் டைந்தினுக்கு ளுயிரா நாமம்
உறங்காத வில்வியுளத் துறைந்த நாமம்
பலகலைதேர் சரபங்கர் பன்னு நாமம்
பாயபுகழ்க் கவியரசர் பாடு நாமம்


  • ராமபத்ரன் விஷயமான 'பத்ரங்கர்ணேபி' என்னுஞ் சுருதியே நாந்தியாதலால் இங்ஙனங் கூறியது.

‡எட்டு - திருமந்திரம். ஐந்து - சிவபஞ்சாக்ஷரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/43&oldid=1319774" இலிருந்து மீள்விக்கப்பட்டது