பக்கம்:திருவடி மாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 திருவடி மாலை

முத்திக்கு வித்தாக முன்னு நாமம்
†முதியவரு மிளையவரு மொழியு நாமம்
சித்திக்கு மந்திரமாத் தேர்ந்த நாமம்
சீராம நாமமெனச் செப்பு வாயே.

11. ✽ தாரணியிற் கலிதெறுவே தாந்த நாமம்
சபரிநெடுங் காலமுளஞ் சமைத்த நாமம்
 †பேரணியி னவர்க்குநலம் பேணு நாமம்
பிரியவந சூயைபுகழ் பேசு நாமம்
ஏரணியுந் திரிசடைக்கு மினிய நாமம்
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்
சீரணியு முமையவள்முன் றெளிந்த நாமம்
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக் கருணாகர மூர்த்திக்
காரா தனையிதுவா வாதரித்து-நாரானே
சீராம நாமத் திருப்பாட் டிவனுரைத்தான்
மாரா கவன்கவிஞர் மன்.


† பல்முனையாகும் பல்வீழ்ந்தாரும் எ - று. ரா.ம இரண்டும் பல்வேண்டா எழுத்துக்கள்

✽ கலீஸந்தாரண உபநிஷத்து மந்த்ரமாதல் காண்க.

"† வரிசிலை நெடியேபன், பேர்படைத்தவர்க்

கடியவர்க் கடியரும் பெறுவார்,வேர்படைத்தவெம் பிறவியாற் றுவக்குணா வீடு."

(கம்பர்)

- - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/46&oldid=1319759" இலிருந்து மீள்விக்கப்பட்டது