பக்கம்:திருவடி மாலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவடி மாலை

வாழ்த்து


1.திருவினிய பொய்கை கருவினொளிர் பூதன்
     செகமுழுவ தும்பே யெனவகலு நன்பேய்
மருவினிய பாணன் வளர்மழிசை யூரன்
     மகிழ்புதுவை நாதன் மதுரகவி கோதை அரசினுயர் கொங்கர் மகிபகுல துங்கன்
     அடியர்பத தூளி யணிகுறைய லாளி குருகைமகிழ் மாறன் பெரியசட கோபன்.
     குரவரிவர் தாள்சேர் குவரடிமை யானே.

2.விதியோர்தர வியலாதமு குந்தன்மிசை யன்பின்
     விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்
     மதியோர்புகழ் குருகூர்மகிழ் மாறன்சட கோபன்
     மதுரத்தமி ழமிழ்தைப்பொரு மறையைப்பொழி [முகிறாள்
துதியோர்குரு வழிபாடுசெய் கோளூர்மறை வாணன்
     றுகடீர்மது ரகவீச னிணைச்செம்பத பதுமங்
கதியோர்தரு பூதூரெதி ராசன்பத கஞ்சங்
     கலைதேர்வர வரயோகிகள் கழலேதொழு [வோமே .

தி.--1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/7&oldid=1318847" இலிருந்து மீள்விக்கப்பட்டது