பக்கம்:திருவடி மாலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 திருவடி மாலை



நூல்


1.பொருள்கொடுத்து வசைகேட்கும் புல்லர்க் கேயும்
        பொறுக்கரிதாய்ச் செவிசுடும்வெம் புன்சொல்
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு [பெய்தாய்
        மம்மானின் றிருவுளத்துக் காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந் தெளிய லாகாத்
        தெய்வங்கள் தெய்வதமாஞ் செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
        லிழித்துரையிற் பழித்துரைப்பா னெண்ணி [னேனே.

2.மறையெடுத்துன் குணத்தொன்று வழுத்தப் புக்கு
        மனம்வாக்குக் கெட்டாத மகிமைத் தென்றே
யிறையெடுத்துச் சொலமாட்டா தீண்டு மீண்ட
        வேற்றமுள போற்றுமுளச் சோதீ யுன்னைத்
துறையெடுத்த நெறிதோன்றா நாயே னெய்தச்
        சொல்லாலே கூவுகின்ற தெல்லாம் பாலர்
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
        பிதற்றுகின்ற தன்மையினும் புன்மைத் தம்மா.

3.ஏரிதான் மாரியினுக் கேது வாயி
        னிருவிழிநோக் கிரவிவரற் கேது வாயிற்
சீரிதா நின்னருட்கு நாயேன் செப்புஞ்
        சிறுசொல்லு மேதுவெனச் சிறக்கு மம்மா
பாரினீ யருள்செய்வாய் செய்யா யானோ
        பயன்கருதேன் பருகுபவன் பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
        துய்யாமை யேத்தினே னுடைய கோவே.

4.சொல்லாலே மேலாப்புச் செய்து வானிற்
        றிகழ்சோலை மலைமேய தேவ தேவே
சொல்லாலே யுனைவழுத்தத் துணிவ தெல்லாந்
        துகிலாலே யெரியவிக்கத் துணிவ தாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவடி_மாலை.pdf/8&oldid=1318975" இலிருந்து மீள்விக்கப்பட்டது