பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


என்பது பெரிய புராணம். இத்திருமுறையின் பொருளை மக்கள் எல்லோரும் உணர்ந்து உயிரிரக்கமுடையவராய் அருட்பெருஞ் சோதியாண்டவரைக் கண்டு போற்றி உய்தி பெறுதல் வேண்டும் என்னும் பெரு வேட்கையினாலேயே அருட்பிரகாச வள்ளலார் சீவகாருணிய வொழுக்கத்தினை நன்கு வற்புறுத்துவராயினர். இவ் உயிரிரக்க உணர்வினைக் கடைப்பிடித்து ஒழுகாதவர்கள் சிவபரம் பொருளைக் கண்டு உய்தி பெறுதல் இயலாது என்பதனை,

'ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'

எனத் தேசிய கவி பாரதியார் குறித்துள்ளமை இங்கு நோக்கத் தகுவதாகும்.