பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


வராயினும் இருவகைப் பற்றுக்களையும் துறந்து மெய்யுணர்வுடைய ஞானிகளாவார். அத்தீய செயலினைத் தாம் உள்ளுதலும் தீதாகும் என்பதனை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது இத்திருவருட்பாவாகும்.

இதுபற்றியே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் புலால் மறுத்தலாகிய இவ்வறத்தினைத் துறவறவியலில் அருளுடைமை யதிகாரத்தின் பின்னும், தவம் என்ற அதிகாரத்தின் முன்னும் வைத்தருளினார் எனக்கருத வேண்டியுளது. எனவே புலால் மறுத்திலாகிய விரதம் அருளுடைமையின் காரியமாகவும் தவத்தின் காரணமாகவும் அமைந்தது என்பது இங்கு உளங்கொளத் தகுவதாகும்.