பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv


நடையாலும் வழிகாட்டிய பெருமகன் வள்ளலார் என்பதனை நாம் மறக்கலாகாது. பாரதியார் சாதியின் கொடுமையைத்தான் மிகுதியாகத் தாக்கிப்பாடினார். சாதி, சமயம், மதம், சாத்திரக்குப்பை என்ற விகற்ப விளையாட்டு எல்லாம் கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்று அதிர் பறையறைந்தவர் வள்ளலார்.

என் அணிந்துரைக்கண் மரணமிலாப் பெருவாழ்வுக் கோட்பாட்டினைச் சற்று விரிவாக அலசிய தன் நோக்கம் வள்ளலாரின் புதிய தூய சிந்தனை வளர்ச்சியை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கேயாம். எல்லாரும் சாகாவாழ்வு பெறலாம் என்று அவர் மொழிந்த கருத்தினை முன்வைக்கின்றோமேயன்றி அதற்கு அவர் விதித்த சுத்தசன்மார்க்கம் கொலைபுலை யின்மை, ஜீவகாருணியம் என்னும் உயிரிரக்கம் என்ற தகுதிப்பாடுகளை மக்கள் முன் நாம் மறைக்கிறோம், சொல்ல அஞ்சுகின்றோம். இன்னும் சொல்லப்போனால் அருட்பாவை வஞ்சிக்கின்றோம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றோம்.

வள்ளற்பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருணியம் என்னும் உயிரிரக்கப்பண்பு. இர க்க மும் இராமலிங்கரும் குணங்குணியாம் இரண்டற்றநிலையாம். இராமலிங்கசுவாமிகளின் சமயம் என்ன என்று எவரேனும் கேட்பின், அவர் சமயம் அருள்நெறி என்பர் திரு. வி. க. மரணமிலாப் பெருவாழ்வுகூட முத்திபோலத் தனிமனிதப் பயனாகும் ஆருயிரின் தனிவேட்கையாகும். முத்தர்க்கு உலகமக்கட் சமுதாயத் தொடர்பு அற்றது போல, உடற்சோதியினர்க்கும் பழைய உடம்புபோல் வினையாற்றலும் உலகவுறவும் இரா. ஆதலின் சீவகாருணியமே