பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


நாவரசர், சுந்தரர், மணிவாசர் ஆகிய சமயகுரவர் நால்வரையும் பரவும் முறையில் நான்மணிமாலை என்னும் பலுவலைப் பாடிப் போற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளாவர். நான்மணிமாலை என்னும் இப்பனுவலின் சிறப்பினை உணர்ந்த அருட்பிரகாச வள்ளலார், சமயக்குரவர் நால்வரையும் தனித்தனியே போற்றும் முறையிற் பாடிய பனுவல்கள் ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள் மாலை, ஆளுடைய நம்பி அருள்மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை என்னும் நால்வகைப் பனுவல்களுமாகும். இவற்றுள்,

வருபகற் கற்பம் பலமுயன்றாலும்
வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற்பொழுதில் உறஅளித்தனை நின்
உறுபெருங்கருணை என் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணம்காணப்
பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந்தோங்கக் கருணை செய்தளித்த
உயர்தனிக் கவுணிய மணியே

(3235)

எனவரும் பாடல் ஆளுடைய பிள்ளையார் அருண்மாலையில் அமைந்துள்ளது. இப்பனுவல் நால்வர் நான்மணி மாலையில் ஞானசம்பந்தரைப் போற்றிப் பாடிய

கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர் பிடித்துத்
தள்ளும் திருஞான சம்பந்தா

என வரும் திருப்பாடற் கருத்தை உளங்கொண்டியற்றப் பெற்றிருப்பது காணலாம்,