பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


பித்தர்குண மதுபோல ஒரு காலுண்டாய்ப்
பின்னொருகா லறிவின்றிப் பேதையோ ராய்க்
கத்திடும் ஆன்மாக்க ளுரைக் கட்டிற்பட்டோர்
கனகவரை குறித்துப் போய்க் கடற்கேவீழ்வர்;

(சித்தியார் பரபக்கம்-9)

எனவரும் அருள்நந்திசிவனார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கற்பாலதாகும்.

'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையின் மறைகளாலும் இயம்பரும் பொருளிதென்னத்
தொல்லையி னொன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போற் பரந்தஅன்றே'

(கம்பர். பால-ஆற்றுப்-19)

எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும்,

'வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்
விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை முடிவில்மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா'

(தாயுமான-கல்லாலின்-25)

எனத் தாயுமானாரும் எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்பமதித்தல் வேண்டும் என அறுவுறுத்தியுள்ளார்கள். இவ்வுண்மையினையே வள்ளலாரும்,