பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211


புறுதல், போரிடுதல், கொலைப்படுதல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவ யோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம். பின்னர் காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியவராகப் பிறந்து பிறந்து அகப்படல் சிறைப்படல், சிதைப்படல், முதலிய அவத்தைகளால் இறந்து இறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாம் சென்று சென்று உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

அங்ஙனம் யாங்கள் அப்பிவிறகள் தோறும் அடைந்த அலுப்பும், அச்சமும், அவலமும், களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெரு வாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங் கருணைக்கு யாங்கள் செய்யும் கைம்மாறு ஒன்று தெரிந்தோமில்லை.

உயிர்களின் அகத்தும், புறத்தும், அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே!

இம்மனித தேகத்தில் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும், சிசுப்பருவத்திலும் குமாரப்பருவத்திலும் பலவேறு அவத்தைகளால் அறிவின்றி இருந்தோமாகலின் தேவரீர் பெருங்கருணைத் திறத்தை அறிந்துகொள்ளாமல் வீண்பொழுது கழித்தோம். அப்பருவம் கழிய இப்பருவத் தினிடத்தே எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும் எல்லா உயிர்களையும், எல்லாப்பொருள்களையும் மற்ற எல்லாவற்றையும், தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணமாகி விளங்குகின்ற ஓர்