பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
     இரண்டாட்டாதொழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியர் நெஞ்சினுள்ளே
     கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

(6–61-3)

எனவரும் திருத்தாண்டகமாகும்.

ஆதிசைவ அந்தணராகிய சுந்தரர் தமக்குமுன் வாழ்ந்த அருளாசிரியர்களாகிய திருநாவுக்கரசரையும், திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், தமக்குக் குருவாகக் கொண்டு அவ்விருவருடைய திருப்பதிகங்களையும் இறைவன் திருமுன் அன்பினால் ஒதி அடியார்க்கடியராம் பெரும் பேற்றினைப் பெற்றவர் என்பது,

நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கடியானடித் தொண்டன்

(7–78-9)

எனவும்,

நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும்
     பாடிய நற்றமிழ்மாலை
சொல்லியவே சொல்லி யேத்துகப்பானை

(7- 67–5)

எனவும் வரும் அவருடைய வாய்மொழியால் நன்கு விளங்கும்.

இந்நாட்டில் இடைக்காலத்தில் வந்து புகுந்த பெருந்தீமையாகிய சாதி வேற்றுமையினைக் களைதற் பொருட்டு நம்பியாரூரரால் அருளிச் செய்யப் பெற்ற திருப்பதிகம் திருத்தொண்டத் தொகையாகும். மாதவம்