பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


கரணங்களும் ஆகமாற்றப் பெற்ற திறத்தைவிளக்குவார், செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார், அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்றுயர்ந்த சிவமயம் ஆயினாரென்றார்.

இறைவனது திருவருளில் மூழ்கித் திளைத்த சண்டேசப் பிள்ளையாரது திருமேனி சிவத்துவ விளக்க மாகிய பேரொளியினைப் பெற்று விளங்கியது என்பார் 'சூழ்ந்த ஒளியில் தோன்றினார்' என்றார்.

சிவ அபராதம் செய்தமையால் தன் தாதை எச்சதத்தனுடைய கால்களை மழுப்படையால் வெட்டி வீழ்த்திய சிறிய பெருந் தோன்றலாகிய விசாரசர்மர், தாம் முன் பெற்றிருந்த மாயா காரியமாகிய உடம்பு அதன் தன்மை திரிந்து சிவமயமாய் ஒளியுடன் தோன்றிய நிலையில் 'சிவனார்க்கு மகனார்' எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் நற்பேற்றினைப் பெற்றார் என்பார்,

'வந்து மிகைசெய் தாதை தாள்
மழுவால் துணித்த மறைச் சிறுவர்
அந்த உடம்பு தன்னுடனே
அரனார் மகனார் ஆயினார்'

என்றார் சேக்கிழாரடிகள்.

அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் என்றது, மாயை உடம்பு அதன் தன்மை திரிந்து சிவமயமாய்ப் பொங்கி எழுந்து திருவருளில் மூழ்கிச் சிவ வொளியில் தோன்றியதாதலின் அவ்வுடம்புடனேயே சிவனார் மகனாராவதற்கு ஏதுவாயிற்று. 'ஊனுயிர்வேறு செய்தான்' - யானையின் மேல் என்னுடல் காட்டு வித்தான் 'மானவ யாக்கையொடு' என்பன் இத் தன்மையை விளக்குவனவாம் - (பெரிய-சண்டேசர்-சிவக்