பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267


தன்மையினின்றும் நீங்கித் துய ஒளியுடம்பாய் மாறிய நிலையில் வீடுபேற்றினினை அடைந்தார்கள் என்பது அவர்களது வரலாறுகளால் இனிது புலனாகும். திருநல்லூர்ப் பெருமணப்பதியில் (ஆச்சாள்புரம் என வழங்கும் ஊரில்) நம்பியாண்டார் நம்பியின் திருமகளை மணந்த ஆளுடையபிள்ளையார், தம் திருமணங்காண வந்தோர் அனைவரும் தாம் பெற்றுள்ள ஊனுடம்புடனே நல்லூர்ப்பெருமணத் திருக்கோயிலில் தோன்றிய இறைவனது அருட்பெருஞ்சோதியிற் புகத், தம் மனைவியாரோடும் அதனை வலம்வந்து அச்சோதியில் புகுகின்றவர், ஆன்மபோதம் ஒடுங்கிய நிலையில் இறைவனுடன் ஒன்றியுடனாகும் வீடுபேற்றினை அடைந்தார் என்ற செய்தியினை,

காதலியைக் கைப்பற்றிக் கொண்டு வலஞ்செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர்சோதி நண்ணியத னுட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார்.

(பெரிய-சம்பந்தர் - 1253)

எனவரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமான் தெளிவாகக் குறித்துள்ளார்.

ஆண்ட அரசாகிய அப்பரடிகளார் திருப்புகலூரில் உழவாரத் திருப்பணி செய்துகொண்டிருக்குங்கால் தம்முடைய மன முதலிய அகக் கருவிகள் உலகியற் பொருள்களிற் புறத்தே செல்லுதலை ஒழித்து தம்வசம் அடங்கிய நிலையில் எண்ணுகேன் என் சொல்லி யெண்னுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால் எனத் தொடங்கும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் 'புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' எனப்புகன்று தம்முடைய உடம்பு நண்ணரிய சிவானந்த