பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279


இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்பதும் அடிகளார் தரும் பொருள் விளக்கம்.

நாம் பெற்ற உடம்பு இறவாதிருக்க வேண்டுமானால் சிவயோகத்தால் மூலாக்கினியை உள்ளிருந்தெழுப்பி உள்ளே மதி மண்டலத்தின் அமுதம் உருகி ஒழுக அதனைப் பருகி, குண்டலினி சத்தியாகிய அம்மையால் வளர்க்கப்பட்டு நரை திரையின்றி வளரும் அழியாத உடம்பினைப் பெறுதலே சாகாக் கல்வி எனப்படும்.

இன்னம் பிறப்பதற்கிடமென்னில் இவ்வுடலம்
     இறவா திருப்ப மூலத்
தெழுமங்கி அமிர்தொழுக மதி மண்டலத்திலுற
     என்னம்மை குண்டலினிபால்
பின்னம் பிறக்காது சேயென வளர்ந்திடப்
     பேயேனை நல்க வேண்டும்

(தாயு-சச்சிதா-9)

எனவும்

'கால்பிடித்து மூலக்கனலை மதிமண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.'

(௸ பராப-156)

எனவும் வரும் தாயுமானார் வாய்மொழிகள் மேற்குறித்த சாகாக் கல்வியின் பயனை விரித்துரைப்பனவாகும்.

'மதிமண்டலத்தமுதம் வாயார உண்டே'
(திருவருட்-3832)
'இந்தார் அருளமுதம் யானருந்தல்'
(௸ 3833)
'சாகா அருளமுதம் நான் அருந்தி'
(திருவருட்-3834)
'அருளோங்கு தண்ணமுதம்'
( ௸ -3835)