பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300


போற்றும் ஆரவாரமும் உலகியல் வாழ்வில் வாழ்ந்து உயிர்துறந்தோர் உடம்பினை அடக்கம் செய்யும் நிலையில் அவர்தம் சுற்றத்தார் அழுது புலம்பும் ஆரவாரமும் இடுகாட்டில் நிகழ்தலை,

"துறவோர் இறந்த தொழுவிளிப்பூசலும்
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்"

(மணிமேகலை. 6, 72, 73)

எனவரும் தொடரிற் சாத்தனார் குறித்துள்ளமை காணலாம். அரசர்கள் இறந்தால் அவர்தம் உடம்பினைச் சமாதி வைத்துக் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது இவ்வுண்மை,

'அரசர்க் கமைந்தன. ஆயிரங் கோட்டம்'

(ഥணி-6-166)

எனவரும் மணிமேகலைத் தொடராலும், சோழமன்னர்களுக்கு அமைந்த சமாதிக் கோயில் களாலும் நன்கு புலனாகும். இத்தகைய சமாதிக்கோயில்கள் 'பள்ளிப் படை' என வழங்கப்பட்டுள்ளமை கல்வெட்டுக்களாற் புலனாகும்.

மெய்யுணர்வு பெற்ற பெரியோர்கள் உயிர்துறந்தால் அவர்தம் உடம்பினை எரித்தல் கூடாது என்றும், அவ்வுடம்பினைச் சிறந்த இடத்திற் புதைத்துச் சமாதி செய்தல் வேண்டும் என்றும், சிவஞானிகளாகிய அவர்தம் உடம்பினைத் தீயிலிட்டு எரித்தால் நாட்டு மக்கள் வெப்பு நோயினால் வருந்துவர் என்றும், அவர்தம் உடம்பினைப் புதையாது நாய் நரி தின்னும்படிப் புறக்கணித்தால் நாட்டில் போருண்டாகி நாட்டு மக்கள் அழிவர் என்றும், ஞானிகள் உடம்பில் தீப்பற்றி எரியுமானால் அது இறைவனுறையுந் திருக்கோயிலைத் தீயிட்டதனை ஒக்கு