பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303


காணப் படுவதும் உண்டு. அஃது எவ்வாறாயினும் அன்புடையார் உடம்பினைச் சுட்டெரிப்பது பண்புடைமையாகாதென்பதும் உலகவாழ்க்கையில் மெய்ம்மை யுணர்ந்தோரது உடம்புக்குமதிப்பளித்து அதனைத் தீக்கு இரையாக்காது சமாதிசெய்தலே அன்புடையவர் செயலாம் என்பதும் வள்ளலார் திருவுள்ளக்குறிப்பாகும்.

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
     திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
     மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீ மூட்ட வல்லீரால்
     நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
     ஏன் பிறந்து திரிகின்றீரே.

(5608)


குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டது சுட்
     டால் அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச்
     சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம் புதைக்கச் சம்மதியீர் பணம் புதைக்கச்
     சம்மதிக்கும் பேயரே நீர்
எணம் புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
     கஞ்சுவரே இழுதையீரே.

எனவரும் திருவருட்பாப் பாடல்களால் வள்ளலார் சமாதிக் கிரியையினை நன்கு வலியுறுத்தியுள்ளமை அறியத்தகுவதாகும்.