பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வள்ளலார் செந்தமிழ்

தமிழிலக்கிய வரலாற்றில் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டினை ஒரு பொற்காலமெனக் கூறலாம். இக் காலத்திலே தான் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்து நல்லூர் சிவத்திரு ஆறுமுக நாவலர் அவர்களும், வடலூர் இராமலிங்க வள்ளலாரும் தோன்றித் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்சமயமாகிய சைவசமய வளர்ச்சிக்கும் ஆக்கம் தரும் நிலையான பல புலமைப்பணிகளைச் செய்து உள்ளார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்து வானாகிய பிள்ளை அவர்கள் செந்தமிழ் நூல்களை நன்றாகப் பயின்றும், வடமொழியில் உள்ள நூல்களின் கருத்துக்களை உணர்ந்தும், மாணவர் பலருக்கும் ஆர்வமுடன் சிறந்த நூல்களைப் பாடம் சொல்லியும், தம்முடைய பாவன்மையால் தலபுராணங்கள் இருபத்தி ரண்டும், சரித்திரங்கள் மூன்றும், மான்மியம் ஒன்றும் காப்பியங்கள் இரண்டும், பதிகம் நான்கும், பதிற்றுப்பத்து அந்தாதி ஆறும், திரிபந்தாதி நான்கும், எமக அந்தாதி மூன்றும், வெண்பா அந்தாதி ஒன்றும் மாலை ஏழும், பிள்ளைத்தமிழ் பத்தும், கலம்பகம் இரண்டும், கோவை மூன்றும், உலா ஒன்றும், தூது இரண்டும், குறவஞ்சி ஒன்றும், சிலேடைவெண்பா ஒன்றும், கப்பற்பாட்டு, குருபரம்பரை அகவல், ஆனந்தக்களிப்பு, பொன்னுாசல்,