பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370


பிறியாமல் என் உருவில் கலந்து கலந்தினிக்கும்
     பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப் புணர்ச்சி எனை அழியா தோங்க
     அருளிய தீண்டகப் புணர்ச்சி அளவுரைக்கலாமே.

(5813)

எனவரும் அநுபவ மாலையாகும்.

இதுகாறும் எடுத்துக் காட்டியவாற்றால் திருவருட்பாவில் அமைந்த அகத்துறைப் பாடல்கள் யாவும் கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கம் என்ற அகப் புறத்துறையில் அடங்குவனவாய் எல்லாம் வல்ல இறைவனை ஆருயிர்த் தலைவனாகவும் அவன் அருள் விழைந்த ஆன்மாவைத் தலைவி ஆகவும் கொண்டு பாடப் பெற்றன என்பது ஒருவாறு விளக்கப்பெற்றமை காணலாம்.