பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தளரானெ ன்றும் தளர்வோனென்றும்
ஆதி யென்றும் அசோகினன் என்றும்
போகியிற் பொலிந்த புராண னென்றும்
இன்னவை முதலாத் தாமறி யளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க்கு அவ்வவையாகியடையப்
பற்றிய பளிங்கு போலும்,
ஒற்றி மாநக ருடையோய் உருவே.

(திருவொற்றியூர் ஒருபாவொருபஃது) என வரும் திருப் பாடலில் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார்.

'திருவொற்றியூரில் எழுந்தருளிய பெருமானே! மாதொருபாகனாகிய நின்னைத் திருமாலென்றும், பிரமனென்றும், அருகனென்றும், புத்தனென்றும் பல்வேறு பெயர்களாற் சமயவாதிகள் பலர் மாறுபடக் கூறினாலும் யாவர்க்கும்மேலாம் இறைவனாகிய நீ அவ்வச்சமயத்தவர்களுக்கு அவரவர் நினைத்த திருமேனி கொண்டு தோன்றி அருள் புரிகின்றாய். பளிங்கு தன் கண் சார்ந்த பொருளின் தன்மைகளைப் புலப்படுத்தி அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றித் தனித்து விளங்குமாறு போன்று மேம்பட்டு விளங்குதல் நின்திருவுருவின் இயல்பென உணர்ந்தோம்' என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். இத் திருப்பாடலை அடி யொற்றியமைந்தது,

'சுருதி வானவனாம் திருநெடுமாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகவுயிர்க் கமுதாம்