பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15

இது ஆகமாந்தம் என்றும் வழங்கப்பெறும். இவற்றை வள்ளலா ர் வேதாந்த ஆக மாந்தாந்தம்' என்று குறித்துள்ளார் (வரி 7)

இவற்றின் வேறாகக் கேவலாத்துவிதம், சுத்தாத்துவிதம் என்ப வற்றைக் குறிப்பிடுவர், வள்ளலார் (வரி 30).

அத்துவிதம் என்பது பிரமப்பொருளாகிய சிவமும் ஆன்மாவும் கலந்து ஒன்றாதல். இவ்விரண்டும் கலந்த விடத்து ஆன்மா வேறு சிவ வேறு என்று இரண்டாதல் இன்றி, ஒன்றாம் என்பது கேவலாத்துவிதம்.

|நீரும் நீரும் சேர்ந்தவிடத்து இரண்டும் ஒன்றாய், நின்ற நீர்.கலந்த நீர் என வேறுபடுத்து உணராதவாறு கலந்து ஒன்றாவது கேவலாத்துவிதம்.

|நீரும் நீரும் போலச் சிவனும் ஆன்மாவும் ஓரினப் பொருள் அல்லவா தலின் அவற்றின் கலப்புக் கேவலாத்துவிதம் அன்று என்பர் சிலர்.

மல மறைப்பு அறக்கெட்டுத் தூயதாகிய ஆன்மாவும், இயல்பாகவே மலமில்லாத சிவமும் சுத்த நிலையில் அத்துவிதமாய்க் கலத்தல் சுத்தாத்துவிதம் எனப்பெறும்.

வேதாந்தம் நிகமாந்தம் என்றும் கூறப்பெறும். வேதநீதியை வேதியர் நிகமநீதி என்பர்.

வேதங்கள் ஒன்றினொன்று ஒப்பு உயர்வு இல்லாதவை.அத்தகைய வேதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை ஆராய்ந்து முடிவு காண மாட்டாத நிலைமையுடையது பரசிவம். "வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்" என்பர் மணிவாசகர் (சிவபுராணம் வரி 34 -35)

திருப்பெயர் விளக்கம்

பரசிவம் சங்கரன் எனப்படுவர் (வரி 36). "இன்பம் செய்தலிற் சங்கரன் எம்பிரான்" என்பர் சிவ ஞான முனிவர் (காஞ்சிப் புராணம்) பரசிராமேச்சரப் படலம், செ. 44) .

இவர் அநாதி, ஆதி (36)

இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபொழுது அதில் சிக்கிக்கொண்டமையின் சாமகீதம் பாடிநாளும் வாளும் பெற்றான்.

இதனால் பரசிவம் சாமகீதப் பிரியன் (37) எனப்பட்டார்.